Pages

Wednesday, May 2, 2018

How to we hear other mobile voice calls? How to record voice calls in th...

ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

இனி ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

ஒரே வினாடியில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்யும் ‘ஃபிளக்சிபல் சூப்பர் கேப்பாசிட்டர்’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கும் மிக பெரிய பிரச்னை மொபைலுக்கு சார்ஜ் செய்வது தான். மொபைலில் பல வசதிகள் இருந்தாலும் இரண்டு பலவினங்களும் உள்ளது. அதில் ஒன்று பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும் இரண்டாவது சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும். இந்த இரு பிரச்சனைகளும் விலை அதிகமுள்ள போன்களிலும் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ‘ஃபிளக்சிபல் சூப்பர் கேப்பாசிட்டார்’ என்ற நானோசைன்ஸ் தொழில்நுட்பம் அமெரிக்காவில் உள்ள மத்திய புளோரிடா பல்கலைக்கழக அறிவியல் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

‘ஃபிளக்சிபல் சூப்பர் கேப்பாசிட்டர்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நானோ பேட்டரிகள் ஒரே வினாடியில் போனை சார்ஜ் செய்துவிடுகின்றன. சாதாரணமாக சார்ஜ் செய்வதை விட இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்வதால் சராசரியை விட 30,000 மடங்கு பேட்டரி பவர் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விரைவில் இந்த அதிவிரைவு-சார்ஜ் தொழில்நுட்பம் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Voice to text typer double android application same features. Voice type...