திருடர்கள் ஜாக்கிரதை!
Subscஅமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளிட்ட சாதனங்களில் செயல்படும் அலெக்ஸ் குரல் வழி டிஜிட்டல் உதவியாளர் சேவையில் புதிய திறன் ஒன்று அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் ஹிப்போ இன்சூரன்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த வசதியின் மூலம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அவே மோட் வசதியை இயக்கிக் கொள்ளலாம். அப்போது இந்தச் சாதனம், வீட்டுக்குள் நபர்கள் பேசிக்கொண்டிருப்பதை போன்ற உரையாடலை ஒலிக்க வைக்கும். வீட்டுக்குள் மனிதர்கள் இருக்கும் தோற்றத்தை அளித்து திருடர்களை விரட்டியடிக்கும் வகையில் இந்த டிஜிட்டல் உத்தி பயன்படும் என்று கருதப்படுகிறது.